Banks should strengthen risk management | இடர் மேலாண்மையை வங்கிகள் வலுப்படுத்த வேண்டும்

புதுடில்லி :அண்மையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட பாதுகாப்பற்ற கடன்கள் மீதான நடவடிக்கை, வங்கிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்கூட்டிய முயற்சி என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான
விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி அண்மையில் கடுமையாக்கியது.
இதைத் தொடர்ந்து, இத்தகைய கடன்களுக்கான ‘ரிஸ்க் வெயிட்டேஜ்’ 25 சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 125 மற்றும்
150 சதவீத புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டது.

வெயிட்டேஜ்

நுகர்வோர் கடன் பிரிவின் சில உட்பிரிவுகளில், கடன் வளர்ச்சி அதிகரித்து வருவதால், வங்கிகள் அவற்றை சரி செய்வதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இது வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிலைத்தன்மை நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்கூட்டிய முயற்சி என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வங்கிகளால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அபாயகரமான கடனுக்கும், அதிக மூலதனம் ஒதுக்கப்பட வேண்டிஉள்ளது. இது ஏதேனும்
நெருக்கடியின் போது, அதிக இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பாதகமான சூழலை எதிர்கொள்ள, கடன் வழங்குபவர்கள் தங்கள் இடர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கியும், அதன் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை தற்போது கணிசமாகவலுப்படுத்தி உள்ளது.

அந்த வகையில், பாதுகாப்பற்ற தனிநபர் கடனுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களை சமாளிப்பதை எளிதாக்கும்.

சுயபரிசோதனை

வீடு, கல்வி, வாகனம் போன்ற பிரிவுகள் நல்ல வளர்ச்சி கண்டு வருவதால், அவற்றில் ஆபத்து வருவதற்கான சாத்தியக்கூறு இல்லை. எனவே, அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தற்போது நல்ல வளர்ச்சியை காட்டினாலும், அதைத் தக்கவைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. அதற்கு அவை, சாத்தியமான ஆபத்துகள் எங்கிருந்து தோன்றக்கூடும் என்பதைப் பற்றி சிந்தித்து, சுயபரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவற்றின் மீட்புத்தன்மையை மேம்படுத்துவது மட்டுமே, நிச்சயமற்ற தன்மை
களுக்கு எதிரான சிறந்த காப்பீடாக இருக்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.