வாஷிங்டன்: அமெரிக்க- கனடா எல்லைப்பகுதி நயகரா நீர்வீழ்ச்சி அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாகவும், இதில் இருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க – கனடா சர்வதேச எல்லைப்பகுதியில் முக்கிய நகரங்களை இணைக்கும் ரெயின்போ பாலம் உள்ளது. இப்பகுதியில் நயகரா நீர்வீழச்சி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் உரிய விசாரணை நடத்திட நியூயார்க் கவர்னர் காதே ஹூச்சூல் எப்.பி.ஐ., போலீசாருக்குஉத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement