லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவின் ஜனேஸ்வர் மிஸ்ரா பூங்காவில் ஸ்கேட்டிங் செய்து கொண்டு இருந்த போலீஸ் உயர் அதிகாரியின் 10 வயது மகன் சொகுசு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏ.எஸ்.பி., ஆக பணிபுரியும் ஸ்வேதா சீனிவஸ்தவா என்ற அதிகாரியின் மகன் நமிஷ் குமார் நேற்று ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக அதிவேகத்தில் வந்த சொகுசு கார் மோதியது.
அதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை ஓட்டிய 2 பேரை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement