வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரீஸ்: காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இஸ்ரேல் இன்று முதல்( நவ.,22) 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். காசாவில் உள்ள பொதுமக்களை உதவிகள் வழங்கிட மனிதாபிமான போர் உதவிக்கரமாக இருக்கும். இவ்வாறு அந்த பதிவில் பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement