கவுகாத்தி: மணிப்பூர் மாநிலத்திற்கு அரசியல் ரீதியிலான தீர்வு தேவைப்படுவதாக கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு பிராந்திய ராணுவ உயர் அதிகாரி ராணா பிரதாப் கலிதா கூறுகையில், கூகி மற்றும் மெய்டி சமுதாய மக்கள் பிரித்து வைக்கப்பட்டது அரசியல் ரீதியிலான பிரச்னை.
மணிப்பூர் நிலவரத்திற்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும். ஆயுதப்படையினரிடம் இருந்து 4 ஆயிரம் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. அவை இன்னும் மக்களின் கைகளில் உள்ளது. அவை கலவரத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement