சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் உள்ள கனிஷ்கர் பட்டாசு ஆலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 12 பெண்கள், ஒரு ஆண் என 13 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பட்டாசு ஆலையின் ஒருபகுதியாக செயல்பட்டு வந்த பட்டாசு விற்பனை கடையில் சோதனைக்காக வெடித்த பட்டாசுகளில் இருந்து கிளம்பிய தீப்பொறி பறந்து ஆலையினுள் விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, இதுகுறித்த புகாரின்பேரில், பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி(43), போர்மேன் கனகராஜ்(41), பணியாளர்கள் ராம்குமார்(25), ஜெயமுருகன்(32) ஆகியோர் மீது எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஜெயமுருகன் தவிர்த்து மற்றவர்களை ஏற்கெனவே போலீஸார் கைது செய்திருந்த நிலையில் தலைமறைவான நபரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஜெயமுருகனின் தலைமறைவு குறித்து போலீஸூக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிவகாசி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸார், ஜெயமுருகனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஜெயமுருகன் மனைவி பாக்கியம் என்பவரும் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.