வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இன்று காலை… தூங்கி எழுந்து வானொலியை ஆன் செய்தவுடன் பிரபல பண்பலையில் ஒரு அருமையான பாட்டு ஒளிபரப்பாகியது அதைக் கேட்டவுடன் மனதில் ஏதேதோ நினைவுகள்… எவ்வளவு அர்த்தமுள்ள கருத்துக்கள் அந்தப் பாடலில்…
பாடல் கேட்ட சுவாரஸ்யத்தில் பால் பொங்கி.. அதை கவனிக்காமல் திட்டு வாங்கி…அது வேறு கதை.
வீட்டில் ஆசையா து கணவன் மனைவியை திட்டுவது ஒரு தப்பா என்ன? ஹிஹிஹி …
அதை விட்டுத்தள்ளுங்கள் .
அந்தப்பாடல் தலைமுறை தலைமுறையாய் கேட்டு ரசிக்கும் பாடல்
.உலகம் இருக்கும் வரை தேவைப்படும் கருத்துகள் அடங்கிய பாடல்.
அழிவில்லாத தேவ கானங்களில் ஒன்று.
அழியாத காவிய பாடல்
ஒவ்வொரு மனிதனும் மனதில் நிறுத்த வேண்டிய பாடல் தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்.
(பொது இடங்களில் இந்தப் பாடல் ஒலிக்கிறபோதுஅருகில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் கண்டிப்பாக பார்த்துக் கொள்வார்/சற்றுநேரம் யோசிப்பர். இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. )
திரு கண்ணதாசன் அவர்களின் முகம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் பாடல். கண்டுபிடித்து விட்டீர்களா?

ஆம் நீங்கள் கண்டுபிடித்தது மிகவும் சரிதான் !1973 ஆம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த ‘சூரியகாந்தி’ திரைப்படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில், டி.எம். சௌந்தர்ராஜன் அவர்கள் பாடுவதாக அமைந்துள்ள பாடல்
‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ? என்ற.பாடல்.
கவிஞர் காரைக்குடி ஈன்றெடுத்த காவியக் கவிஞனே திரையில் பாடுவதாக அமைந்திருக்கும் .
“தன்னை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு மனப்பான்மை பிடித்து ஆட்டும் கணவனின் ஈகோ தான் கதைக்களம்.(ஈகோ பிடித்த கணவனாக முத்துராமன் படத்தில் வாழ்ந்திருப்பார் )
“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது” என்ற பாடல்.
“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது .
அதில் அர்த்தம் உள்ளது.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது .
” வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்… (கணவன்- மனைவி குடும்ப ஒற்றுமைக்கு இதை விட பொருத்தமாக வேறு வார்த்தைகள் இருக்கிறதா என்ன??)

மாட்டு வண்டி போகாத ஊருக்கு கூட பாட்டு வண்டியை கொண்டு சென்ற கவிஞரின் ஆழமான எளிய வார்த்தையுடன் கூடிய பாடலை அதனுடைய தன்மை குறைக்காமல் இதமான மெட்டமைத்து அனைவரையும் ஈர்க்க வைத்த பெருமை எம்எஸ்வி அவர்களைச் சாரும்.
பாரதிக்குப் பின் தமிழ் கண்ட மகாகவி எவ்வளவு அழகாக வாழ்வியல் தத்துவத்தை சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
வாழ்வின் எதார்த்தங்களை மிக அழகாக வெளிப்படுத்திய கவிஞரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.
பாடலைக் கேளுங்கள். உறவுகள்/ நட்புகள் அனைவரிடத்திலும் அன்பாக பழகுங்கள்.(நம் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இந்த ஒரு பாடல் போதும்) கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.