பிரியாணிக்காகக் கொல்லப்பட்ட இளைஞர்… சடலத்தின் முன்பு நடனமாடிய 16 வயது சிறுவன்! – டெல்லி `பகீர்'

பணத்தை முன்னிறுத்தி நடக்கும் கொலைகள், தற்போது அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், 18 வயதுகூட நிரம்பாத சிறுவன், 350 ரூபாயைத் திருடுவதற்காக இளைஞர் ஒருவரைக் கொலைசெய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியின் ஜந்தா மஸ்தூர் காலனிப் பகுதியில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக, செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

காவல்துறை

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனைக்குப் பிறகு இறந்துகிடந்த இளைஞரின் உடலில், சுமார் அறுபது கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில். அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போதுதான் அதிர்ச்சி சம்பவம் குறித்த தகவல்கள் வெளிவந்தன. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “பாதிக்கப்பட்டவருக்கும் கொலையாளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிகிறது. கொலைசெய்யப்பட்டவர் பையிலிருந்து 350 ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கொலையில் ஈடுபட்ட சிறுவன் (வயது 16), பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியிருக்கிறான். அவனின் பெற்றோர் தினக்கூலியாக வேலை செய்துவருகிறார்கள். சம்பவம் நடந்தபோது சிறுவன் போதையில் இருந்தது தெரியவந்திருக்கிறது. கொலைசெய்யப்பட்டவரிடம் பிரியாணி சாப்பிடவேண்டும் என 350 ரூபாயைக் கேட்டிருக்கிறான் சிறுவன். அவர் பணம் தர மறுத்ததும், அவரிடமிருந்து திருட முயன்றிருக்கிறான். அதனால், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அதில், சிறுவன் அந்த இளைஞரின் கழுத்தை நெரித்திருக்கிறான்.

கொலைசெய்த சிறுவன்

அதில் அவர் மயங்கியதும், கழுத்து உள்ளிட்டப் பகுதிகளில் சரமாரியாகக் கத்தியால் குத்தியிருக்கிறான். இதனால், நிலைகுலைந்த அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார். அதையடுத்து, அவரின் சடலத்தை அருகிலிருந்த சந்துக்கு இழுத்துச் சென்ற சிறுவன், சடலத்தின் முன்பு நடனமாடியிருக்கிறான். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதனடிப்படையில் அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.