
பெண்கள் கிரிக்கெட் விளையாட்டின் தூதரான கீர்த்தி சுரேஷ்!
கேரளா பெண்கள் கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா கிரிக்கெட் சங்கம் தங்களது மகளிர் அணிக்கான விளம்பரத்திற்காக அவரை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நவம்பர் 26ம் தேதி நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இணையதளம் வாயிலான டிக்கெட் விற்பனையை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்திருக்கிறார்.
அதோடு உள்நாட்டு போட்டிகளில் அனைத்து வயது பிரிவுகளிலும் முதல் தரம் மற்றும் சூப்பர் லீக் ஆட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றவர்களை அவர் வாழ்த்தியிருக்கிறார். அப்போது பெண்கள் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.