
முதலாமாண்டு திருமணநாளை கொண்டாடும் ரித்திகா
விஜய் டிவி சீரியல்களில் தோன்றிய ரித்திகா தமிழ் செல்வி தமிழக இளைஞர்கள் பலருக்கும் பேவரைட் நடிகையாக இருந்து வருகிறார். வினு என்பவரை காதலித்து வந்த அவர் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் நுழைந்தார். அதன்பிறகு பாக்கியலெட்சுமி சீரியலை விட்டும் விலகிவிட்டார். திருமணமாகி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் முதலாமாண்டு திருமணநாளை முன்னிட்டு குருவாயூர் கோயில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாக ரித்திகா-வினு தம்பதியினருக்கு பலரும் திருமணநாள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.