வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட மசோதாக்களை தடுக்க முடியாது என பஞ்சாப் கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10 ம் தேதி நீதிபதி அளித்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டு வரும் மசோதாக்களை தடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்தி வைக்க முடிவு செய்தால் சட்ட பேரவையின் பரிசீலனைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
விதி எண் 200-ன்படி மசோதாவை நிறுத்தி வைப்பதால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டி வரும். மூன்றாவது வாய்ப்பாக ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்.
பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கலாம். மசோதாக்களை திருப்பி அனுப்பாவிட்டால் சட்டமன்ற நடவடிக்கைகளை பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
சட்ட பேரவை முடிவை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது. கவர்னர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மாநில அரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை கவர்னர் தடுக்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கே அதிக அதிகாரம். இவ்வாறு நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக கவர்னர் எப்படி
மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக கவர்னர் ரவி ஒப்புதல் தராமல் இருப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தொடர்ந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement