வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி குருபத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்காக நடந்த சதியை அந்நாடு முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர்கள் என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவன் ஆவார். இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், இவரை, அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்காக நடந்த சதி முறியடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அது குறித்து கவலையும் அதிர்ச்சியையும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது, இந்திய அரசின் கொள்கைகள் அல்ல எனவும், இது குறித்து இந்திய அரசு முழு அளவில் விசாரணை நடத்தி வருவதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இதனை இந்திய அரசு தீவிரமாக எடுத்து கொண்டு உள்ளது, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement