Pure EcoDryft 350 Ebike – ரூ.1.30 லட்சத்தில் ப்யூர் ஈக்கோடிரிஃப்ட் 350 எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வெளியானது

ப்யூர் இவி அறிமுகம் செய்துள்ள மேம்பட்ட புதிய ஈக்கோடிரிஃப்ட் 350 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் அதிகபட்சமாக 170 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்று விதமான டிரைவிங் மோடு கொண்டுள்ள இந்த பைக்கின் ரேஞ்ச் 105 கிமீ முதல் 170 கிமீ வரை மோடினை பொருத்து மாறுபடும்.

முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த ஈக்கோடிரிஃப்ட் மாடல் 3 KWH பேட்டரி பெற்று 75-125 கிமீ ரேஞ்ச் வழங்குவதுடன் விலை ரூ.1,12,999 தற்பொழுது கிடைக்கின்றது.

Pure EcoDryft 350 Electric Bike

தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற கம்யூட்டர் ரக பிரிவில் வந்துள்ள புதிய ப்யூர் ஈக்கோடிரிஃப்ட் 350 மாடலில் ஆறு MCU உடன் கூடிய மின்சார மோட்டார் 3 kW (4 bhp) பவர் மற்றும்  40 Nm டார்க் உருவாக்குகிறது. இந்த பேட்டரி மோட்டார் சைக்கிளில் 3.5 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அதிகபட்ச வேகம் மணிக்கு  75 கிமீ எனக் கூறுகிறது மற்றும் டிரைவ், கோரஸ், மற்றும் திரில் மோடு என மூன்று ரைடிங் முறைகள் உள்ளன.

ஈக்கோடிரிஃப்ட் 350  பைக்கில் குறைந்த வேகத்தை வழங்கும் டிரைவ் மோடு மணிக்கு 45 கிமீ, கோரஸ் மோட் 60 கிமீ மற்றும் திரில் மோட் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வழங்குகின்றது. குறைந்த வேகத்தை வெளிப்படுத்துகின்ற டிரைவ் மோடு மூலம் 130 கிமீ வரை ரேஞ்ச் நிகழ்நேரத்தில் கிடைக்கலாம்.

முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். பேட்டரி மற்றும் மோட்டாருக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி 5 ஆண்டு அல்லது 60,000 கிமீ வழங்கப்படுகின்றது.

ecodryft 350

ecoDryft 350 எலக்ட்ரிக் கம்யூட்டரில் ரிவர்ஸ் மோட், கோஸ்டிங் ரீஜென், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் டு டவுன் ஹில் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் ஆகியவற்றுடன் நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு உடன் வருகின்றது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஸ்பீரிங் டூயல் சஸ்பென்ஷன் இடம்பெற்று, பிரேக்கிங் அமைப்பில் முன்புற 80/100 R18 டயரில் 220mm டிஸ்க், பின்புறம் 80/100 R17 டயரில் 130mm டிரம் பிரேக் உள்ளது.

  • Pure EV Ecodryft 350 – ₹1,29,999
  • Pure EV Ecodryft  – ₹1,12,999

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.