சென்னை: ரஜினி, கமல் இருவரும் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இருவருமே அடுத்தடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது ஹைப்பை எகிற வைத்துள்ளது.
