வவுனியா மாவட்டத்தின் விவசாயிகளுக்காக டொம் ஈ.ஜே.சீ. வகை 84,000 மாமரக் கன்றுகள் வழங்கும் திட்டம்

வவுனியா மாவட்டத்தின் விவசாயிகளுக்காக ஈ.ஜே.சீ. வகை 84,000 மாமரக் கன்றுகள் வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் வாழும் மக்களுக்காக ஈ.ஜே.சீ. வகை 84,000 மாமரக் கன்றுகள் வழங்குதல் தொடர்பாக மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாநாதன் எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.

வவனியா மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 280 வீதம் 300 விவசாயக் குடும்பங்களுக்கு 84,000 மாமரக் கன்றுகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டம் இடம்பெற்றுவருகின்றது. தற்போது 207 விவசாயக் குடும்பங்களுக்கா 47,424 மா மரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்காக சூரிய சக்தி நீர்ப்பம்பிகள் மற்றும் மண்ணெண்ணெய் நீர்ப்பம்பிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர: சகல மாவட்டங்களிலும் ஒரே வகை உற்பத்திகளை விருத்தி செய்வது பொருத்தமற்றதாகும்.

இந்த வகை மாங்கன்றுகள் மரமாக அன்றி கொடியாகவே வளரும். இவ்வகை மா வகைகளை தனியொரு பழமாக நடுவதனால் பயனில்லை. ஒரு ஏக்கருக்கு இந்த வகை 560 மரங்கள் வளர்க்க முடியும். வெளிநாட்டு சந்தைகளுக்குச் செல்லும் போது பாரியளவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும். 7 அல்லது 8 மரங்கள் வளர்த்துப் பயனில்லை. இவற்றைப் பைகளில் இட்டு ஒரு புதிய முறையில் தான் இந்த மரங்களை வளர்க்க வேண்டும். நெல் உற்பத்திக்கு அவசியமான உரத்திற்கான மானியத்தை அவசியமான நேரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

2023 சிறு போகத்தில் நெல் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு அவசியமான உரத்தை வழங்கும் திட்டத்தின் கீழ் அவர்களின் விரும்பத்திற்கேற்ப யூரியா மற்றும் பண்டி உரம் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பளிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அவசியமான நேரத்திற்கு பண்டி உரத்திற்காக மானியம் வழங்குவதாக மேலும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தில் உர வகைகளை பொருத்தமான முறையில் பண்டி உத்தைப் பயன்படுத்தியதனால் வரலாற்றில் பதியப்பட வேண்டிய அறுவடையைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இல்லாவிடின் அறுவடையே கிடைத்திருக்காது போயிருக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர விபரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.