வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. துறை ரீதியாக எடுக்கப்பட்ட சில மாற்ற முடிவுகளின் படி இந்த நிலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தரப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் , இந்திய அரசின் பெரும் சவால்களை சமாளிக்க சிரமம் ஏற்பட்டதாகவும் , எதிர்காலத்தில் இந்த நிலை மாறும் என நம்புவதாகவும் ஆப்கன் அரசு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி வந்த பின்னர் பெரும் மாற்றங்களை எடுத்து வருகிறது. இந்நிலையில் தூதரக மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கவும் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement