வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: மேலும் பல பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பர் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலில் இருந்து, 240க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். சமீபத்தில், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, நான்கு நாட்களுக்கு போரை நிறுத்தவும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்கவும் இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. அதற்கு ஈடாக, குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது. அதன்படி நேற்று தாய்லாந்தைச் சேர்ந்த 12 பிணைக் கைதிகள் உட்பட 25 பேரை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு விடுதலை செய்தது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியது, இது ஒரு நல்ல செயல்முறையின் துவக்கமாகும்.மேலும் பல பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என எதிபார்க்கிறோம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement