வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி: கேரளாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பீஹாரைச் சேர்ந்த பெண்ணின் 4 மாத கைகுழந்தைக்கு தாய்ப்பாலூட்டி பசியாற்றிய கேரள பெண் போலீஸ் அதிகாரிக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பெண் தனது கணவர் , 4 மாத கைக்குழந்தை மற்றும் 3 குழந்தைகளுடன் பிழைப்புகாக கேரளாவில் எர்ணாகுளத்தில் முளகுகாடு பொன்னாரிமங்கலம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரது கணவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப் பட்டதால் அந்த பெண்ணின் 4 மாத கைக்குழந்தை மற்றும் 3 குழந்தைகளை பார்த்து கொள்ள யாரும் இல்லை. அவரது 4 மாத கைக்குழந்தை தாயின் அருகில் படுக்கையில் படுத்திருந்தது. மற்ற குழந்தைகள், தவித்தபடி இருப்பது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எர்ணாகுளம் மகளிர் போலீசார் மருத்துவமனை வந்து பார்வையிட்டனர்.,
அப்போது சிகிச்சை பெற்று கொண்டிருந்த பெண்ணில் அருகில் இருந்த 4 மாத குழந்தை தாய்ப்பாலுக்காக அழுவதை பார்த்த ஆர்யா ஷைலஜான் என்ற பெண் போலீஸ் அதிகாரி , பசியால் துடித்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த பெண் போலீஸ் 9 மாத குழந்தைக்கு தாய் என்பதும் தெரியவந்தது. ஆர்யா ஷைலஜனின் இந்த மனிதாபிமான செயலை, உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது எர்ணாகுளத்தில் உள்ள காப்பகத்தில் 4 குழந்தைகளும் சேர்க்கப்பட்டனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement