வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தோகா: உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை ஆய்வு செய்த பிறகு விசாரணை நடக்கும் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படையில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமின் மனுக்கள் பல்வேறு முறை நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் துவக்கியது. அவர்களுக்கு தூதரக ரீதியிலான உதவியும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், எட்டு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மனுவை நன்கு ஆராய்ந்த பிறகு, விசாரணை நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement