வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல்., நிறுவனத்திற்கு நாளை வருகை தர உள்ளார் பிரதமர் மோடி.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து, வடிவமைத்து வருகிறது.
இந்நிறுவனத்திடம் எஸ்.யூ., 30 எம்.கே. ஐ.,ரக போர் விமானங்களை வாங்கிட மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய நாளை (நவ.25) காலை பிரதமர் மோடி பெங்களூரு வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement