அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி உதவித் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஒருகால பூஜை திட்ட கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர் கோ.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.

மேலும், ஒருகால பூஜை திட்ட கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் அல்லது மகள்களின் உயர்கல்விக்கான உதவித்தொகை 400 மாணவர்களுக்கு வழங்கும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதல்வர் வழங்கினார். மேலும், கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 292 மாணவர்களுக்குஊக்கத் தொகை வழங்கும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலை களையும் முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் க.மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.