ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் விடுவிக்கும் அந்த 3 வீரர்கள்..! ஜோப்ரா ஆர்ச்சர் அவுட்

ஐபிஎல் 2024 ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை 26 நவம்பர் 2023 மாலைக்குள், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை பிசிசிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருஊந்து 3 வெளிநாட்டு பிளேயர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த 3 பிளேயர்கள் யார்? என்பதை பார்க்கலாம்.

1. ஜோஃப்ரா ஆர்ச்சர்

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு சேர்க்க இருக்கிறது. இதனால் அந்த அணியிடம் ஏலத்தில் சுமார் 5 கோடி ரூபாய் மட்டுமே பர்ஸ்ஸில் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சில பெரிய வீரர்களை விடுவிக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, கடந்த இரண்டு சீசன்களில் அணியுடன் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் விடுவிக்கப்படுவர்களில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முதல் சீசனில் அவர் விளையாடவில்லை. 2023 சீசனில் சில போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஆர்ச்சர் விடுக்கவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

2. ரிலே மெரிடித்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தையும் மும்பை இந்தியன்ஸ் விடுவிக்கலாம். ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக கடந்த ஆண்டு அவர் அணியில் சேர்க்கப்பட்டார். மெரிடித் ரூ 1.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸில் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த ஏலத்துக்கு முன்பாக மெரிடித் விடுவிக்கப்படலாம். ஏனெனில் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸூக்கு திரும்பியுள்ளார். மேலும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அணியில் நம்பிக்கைகுரியவர்களாக இருப்பதால் ரிலே மெரிடித் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

3. கேமரூன் கிரீன்

மும்பை இந்தியன்ஸ் கேமரூன் கிரீனையும் விடுவிக்கலாம். ஐபிஎல் 2023 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அவரை ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. ஆல்-ரவுண்டராக அவர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அணி அவருக்கு ஒரு பெரிய தொகையை செலவிட்டது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவரது செயல்திறன் மும்பை இந்தியன்ஸுக்கு வலுவாக இருந்தது. குறைவான தொகை மட்டுமே எஞ்சியிருப்பதால் இவரை விடுவிக்க வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.