பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வாளையாரில், உதவி கலால் கமிஷனர் அனில்குமார் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையிலான சிறப்பு படையினர் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழி வந்த கேரள மாநிலம் பதிவு எண் கொண்ட ‘பிக்கப்’ வேனை சோதனையிட்டனர். அப்போது, டிரைவர் கேபின் மீது உள்ள ரகசிய அறையில், 42 கிலோ எடை கொண்ட கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்திய விசாரணையில், மலப்புரத்தைச் சேர்ந்த டிரைவர் நவ்ஷாத், 44, என்பதும், கஞ்சாவை ஆந்திராவில் இருந்து மலப்புரத்துக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement