Amitabh gifted his daughter a Rs 50 crore bungalow | தனது மகளுக்கு ரூ.50 கோடி பங்களாவை பரிசளித்தார் அமிதாப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: இந்தி திரையுலக ஜாம்பவான் அமிதாப்பச்சன் தனது மகளுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள பங்களாவை பரிசாக எழுதி வைத்தார்.

இன்று வரை நாள்தோறும் சினிமா உள்பட பல்வேறு விளம்பரங்கள் மூலம் கோடி மேல் கோடி சம்பாதித்து வருகிறார் அமிதாப். சமீபத்தில் தனது 81வது பிறந்த நாளை கொண்டாடினார். மும்பையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தாலும் சமீபத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பிரதீக் ஷா என்ற பங்களாவை மகள் சுவேதா நந்தாவுக்கு எழுதி வைத்துள்ளார்.

16, 848 சதுர பரப்பு கட்டடம் கொண்டதாகும். இதன் மார்கெட் மதிப்பு ரூ.50 கோடி. இதற்கென ரூ. 50.65 லட்சம் பத்திரப்பதிவுக்கு முத்திரை கட்டணம் செலுத்தி தனது மகள் பெயரில் பதிவு செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.