BMW – பிஎம்டபிள்யூ R 12, R 12 nineT பைக்குகள் அறிமுகமானது | Automobile Tamilan

பிஎம்டபிள்யூ மோட்டார்டு புதிய நியோ ரெட்ரோ ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற R 12 nineT மற்றும் க்ரூஸர் ஸ்டைலில் R 12 என இரண்டு பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு பைக் மாடல்களும் 1,170cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.

இந்திய சந்தையில் புதிய ஆர் 12 மற்றும் ஆர் 12 நைன் டி பைக்குகள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வெளியாகலாம்.

BMW R 12

க்ரூஸர் ரக ஸ்டைலிங்கை பெற்றுள்ள புதிய பிஎம்டபிள்யூ R 12 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள ஏர் ஆயில் கூல்டு 1,170cc பாக்ஸர் ட்வீன் என்ஜின் அதிகபட்சமாக 95hp பவர் ஆனது 6,500rpm மற்றும் 110Nm டார்க் 6,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்டீல் டீயூப்லெர் ஃபிரேம் ஆர் 12 பைக் மாடலில் ராக் மற்றும் ரோல் என இரண்டு விதமான ரைடிங் மோடுகளுடன் 19 அங்குல வீல் மற்றும் 16 அங்குல வீல் பின்புறம் பெற்றுள்ளது. டயர் அளவுகள் முன்பக்கம் 100/90-19 மற்றும் பின்புறம் 150/80-16. பிரேக்கிங்  முன்பக்கத்தில் இரட்டை 310மிமீ டிஸ்க்குகள் ரேடியலியாக பொருத்தப்பட்ட 4-பாட் காலிப்பர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் பின்புறத்தில் 2-பிஸ்டன் காலிபர் உடன் 265மிமீ டிஸ்க் உள்ளது.

இந்த மாடலில் யூஎஸ்டி ஃபோர்க் அட்ஜெஸ்டபிள் இல்லாத முறையில் வழங்கப்பட்டுள்ளது. பிளாக்ஸ்டார்ம் மெட்டாலிக், ரெட் மற்றும் ஆப்ஷன் 719 அலுமினியம் ஆகிய மூன்று வண்ணங்களில் பைக் வழங்கப்படும்.

bmw r 12 bike bmw r 12

BMW R 12 NineT

அடுத்து, வந்துள்ள பிஎம்டபிள்யூ R 12 Nine T பைக்கில் ஏர் ஆயில் கூல்டு 1,170cc பாக்ஸர் ட்வீன் என்ஜின் அதிகபட்சமாக 107 hp பவர் ஆனது 7,000rpm மற்றும் 115Nm டார்க் 6,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

ரோட்ஸ்டருக்கு USD ஃபோர்க் அடஜெஸ்ட் செய்யக்கூடியவை ரோடு, ரெயின் & டைனமிக் என மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. புதிய R 12 நைன் T  இரண்டு அனலாக் சுற்று கருவிகள், இடது பக்கத்தில் USB-C போர்ட் மற்றும் ஆன்போர்டு நெட்வொர்க்கிற்கு வலது பக்கத்தில் 12V சாக்கெட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிளாக்ஸ்டார்ம் மெட்டாலிக், சான் ரெமோ கிரீன் மெட்டாலிக் மற்றும் ஆப்ஷன் 719 அலுமினியம் ஆகிய மூன்று வண்ணங்களில் பைக் வழங்கப்படும்.

bmw r 12 nine t

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.