சென்னை: நடிகை விசித்ரா கதை போல, வெளியில் சொல்லமுடியாத பல கதை இருக்கு என்று காதல் சரண்யா பேட்டியில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா, தெலுங்கு படம் ஒன்றில் நடிகர் ஒருவர், தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதோடு படப்பிடிப்பில் சண்டை இயக்குநர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கண்ணீருடன் கூறியிருந்தார்.
