இது ராயல் என்ஃபீல்ட்டின் ராட்சசன்… கண்ணை கவரும் Shotgun 650 பைக் – என்னென்ன ஸ்பெஷல்?

Royal Enfield Shotgun 650: மிகவும் ஸ்டைலிஷான மற்றும் வலிமையான பைக்குகளை தயாரிப்பதில் பெயர் பெற்றது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அதன் தயாரிப்பில் அதிகம் பேசப்படும் Shotgun 650 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது வெளியிட்டது. இந்த பைக்கை அந்நிறுவனம் கோவாவில் நடைபெற்று முடிந்த மோட்டோவர்ஸ் 2023 நிகழ்வில் வெளியிட்டது. 

இந்த பைக்கின் ஸ்டைலிஷ் தோற்றம் மிகவும் ஆக்ரோஷமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இதில் உள்ள கிராபிக்ஸ் கைவண்ணங்கள். இந்த பைக்கின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால், எல்இடி விளக்குகள் மற்றும் தடிமனான பெரிய டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, இந்த பைக்கில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் உள்ளது.

வடிவமைப்பு

ராயல் என்ஃபீல்டு Shotgun 650 பைக்கில், பார்-முடிவில் இருக்கும் கண்ணாடிகள், ஒற்றை இருக்கை, முழு கருப்பு நிற வடிவமைப்பு ஆகியவற்றுடன் ஹெட்லேம்ப்களைக் கொண்டுள்ளது. பைக் முழுவதும் நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கையால் வரையப்பட்ட கிராபிக்ஸ்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, பைக் முழு எல்இடி ஹெட்லைட்டுடன் செமி-டிஜிட்டல் கன்சோல் மற்றும் டிரிப்பர் நேவிகேஷன் மாட்யூலைப் பெறுகிறது. 

ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

எஞ்சின் எப்படி?

ராயல் என்ஃபீல்டு Shotgun 650 பைக்கில் அலாய் வீல்கள், முன் போர்க் மற்றும் தடிமனான டயர்கள் உள்ளன. இந்த பைக்கில் 649சிசி ஏர்/ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 47 php ஆற்றலையும் 52 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

விலை எவ்வளவு?

ராயல் என்ஃபீல்டு Shotgun 650 பைக்கை சமீபத்தில் அறிவித்தது என்றாலும் அதன் விலை மற்றும் அதன் எப்படி முன்பதிவு செய்வது என்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ராயல் என்ஃபீல்டு Shotgun 650 பைக்கின் விலை சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 3.34 லட்சம் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த பைக் குறித்த பெரிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய புல்லட்

ராயல் என்ஃபீல்டு இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் புதிய புல்லட் 350 பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் விலை ரூ.1.74 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த பைக்கில் ஒற்றை இருக்கை, கைப்பிடி, பக்கவாட்டு பெட்டி உள்ளன. இதன் தோற்றம் பழைய புல்லட்டைப் போலவே உள்ளது. இது தவிர, பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது, இது 20 php பவர் மற்றும் 27 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.’

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.