
என் ஹீரோ மம்முட்டி : சமந்தா புகழாரம்
மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள 'காதல் : தி கோர்' படம் கடந்த 23ம் தேதி வெளிவந்தது. இந்த படத்தை 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கி இருந்தார். மம்முட்டி கம்பெனி தயாரித்திருந்தது. இதில் மம்முட்டியும், ஜோதிகாகவும் கணவன் மனவியாக நடித்துள்ளனர். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தை பார்த்த சமந்தா, இந்த படம் இந்த ஆண்டின் சிறந்த படம், மம்முட்டி எனது ஹீரோ, என்று புகழ்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
'காதல் தி கோர் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம், ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் 'காதல் தி கோர்' திரைப்படத்தை பாருங்கள். மம்முட்டி சார் நீங்கள்தான் என் ஹீரோ. உங்கள் நடிப்பில் இருந்து என்னால் நீண்ட காலத்திற்கு வெளியே வர முடியாது. லவ் யு ஜோதிகா. ஜியோ பேபி நீங்கள் ஒரு லெஜெண்ட்' என்று பதிவிட்டுள்ளார்.