ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்த வி. கே. பாண்டியன் இன்று பிஜு ஜனதா தளத்தில் முறையாக இணைந்துகொண்டார். 2011ம் ஆண்டு முதல் முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு அமைச்சர் அந்தஸ்த்தில் உள்ள பதவி வழங்கப்பட்டது. 2000ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் பஞ்சாப் கேடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான கார்த்திகேய பாண்டியன் ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ். […]
