
நடிகை கனகாவா இது…!
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. நடிகர் ராமராஜனின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான 'கரகாட்டக்காரன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கிலும் நடித்துள்ளார். ஏறக்குறைய 90களின் இறுதிவரை நடித்து வந்தார். குடும்பத்தில் நிலவிய பிரச்னை காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி, தனது எக்ஸ் தளத்தில் கனகா உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு கனகா மாறி போய் உள்ளார். குட்டி பத்மினி வெளியிட்ட பதிவில், “பல ஆண்டுகளுக்குப் பின் என் அன்புக்குரிய தேவிகாவின் மகளும், சகோதரியுமான கனகாவை சந்தித்தது மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.
கனகா உடன் குட்டி பத்மினி இருக்கும் போட்டோ வலைதளத்தில் வைரலானது.