பாட்னா பீகார் மாநிலத்தில் இந்துக்கள் பண்டிகை விடுமுறைகளை குறைத்ததாக அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று பீகார் கல்வித்துறை வரும் 2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டது. இந்த பட்டியலில் குறைவான விடுமுறை நாட்களே இருந்தன. ஆனால் கல்வித்துறை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 220 கற்பித்தல் நாட்களை உறுதி செய்யும் வகையில் இந்த நாட்காட்டி உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. பீகார் அரசு ஜென்மாஷ்டமி, ரக்சாபந்தன், ராமநவமி, சிவராத்திரி, தீஜ், வசந்த பஞ்சமி மற்றும் ஜிவித்புத்ரிகா ஆகிய இந்து பண்டிகைகளுக்கான […]
