சபரிமலை,:எருமேலி பஞ்சாயத்தில் ஓருங்கல் கடவு முதல் மணி மலை பஞ்சாயத்தில் சாருங்கவேலி வரை, கிழக்கு- – மேற்காக 3,500 மீட்டர் நீளத்தில் ரன்வே அமைகிறது. ரோடு, வடிகால், பாதுகாப்பு மண்டலம் என, 110 மீட்டர் அகலம் தேவைப்படுகிறது. எருமேலி நகரத்திலிருந்து, 1.5 கிலோ மீட்டர் துாரத்தில் ரன்வேயின் முதல் சிக்னல் அமையும்.
எர்ணாகுளம், மெரிடியன் சர்வே அண்டு மேப்பிங் நிறுவனம் இப்பணியை செய்து வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் அளவீடு பணி முடிவடையும்.
ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலங்களின் விபரங்களை இந்த நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்த பின், நில ஆர்ஜிதம் செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும். பின், விமான நிலையத்துக்கான டெண்டர் விடப்படும். அளவீடு செய்யும் பணியை கேரளா அரசின் முதன்மை கொறடா என். ஜெயராஜ், எம்.எல்.ஏ., செபஸ்தியார் ஆகியோர் நேற்று துவங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement