
கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை
சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரின் மூலம் பிரபலமானவர் சுவாதி. இவருக்கு சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கர்நாடகவை சேர்ந்த சுவாதி ஒரு சில கன்னட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆக உள்ளார்.
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சுவாதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.