
கார் விபத்தில் சிக்கிய ஜி.பி.முத்து : வருத்தத்தில் வெளியிட்ட வீடியோ
பிரபல யு-டியூபரான ஜி.பி. முத்து அண்மையில் கார் விபத்தில் சிக்கினார். சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் தோன்றி வருகிறார். மதுரையிலிருந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது ஜி.பி.முத்துவின் கார் ஒரு மேம்பாலத்தில் நின்றுள்ளது. அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு கார் ஜி.பி.முத்துவின் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை, கார் மட்டுமே சேதாரமடைந்துள்ளது. இந்நிலையில், சம்பந்தபட்ட இரு தரப்பினருமே சமாதானம் ஆகிவிட்ட நிலையிலும், அங்கே சுற்றியிருந்த சில நபர்கள் பிரச்னையை தேவையில்லாமல் பெரிதாக்கிவிட்டதாகவும், தன்னிடம் வம்பு இழுத்ததாகவும் ஜி.பி.முத்து வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதைபார்க்கும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.