வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் 30க்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும்

  • வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் மதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

தற்போதைய உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கு அமைய 2022/2023 மதிப்பீடு ஆண்டுக்கான, அதாவது 2022 ஏப்ரல் 01 முதல் 2023 மார்ச் 31 வரையான காலகட்டத்துக்கான வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் மதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு கையளிக்காத வரி கோவைகளைப் பேணுபவர்களுக்கு 50,000 ரூபாய் தண்டப்பணம் மற்றும் செலுத்தவேண்டிய வரியில் 5 வீதம் தண்டப்படம் விதிக்கப்படும் என வர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, வருடாந்த வருமான அறிக்கையை பூர்த்தி செய்தல் மற்றும் ஒன்லைன் (Online) முறையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு சமர்ப்பித்தல் தொடர்பான செயலமர்வு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வளவாளர்களின் பங்களிப்பில் (27) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொடவினால் நிறைப்படுத்தப்பட்ட இந்த செயலமர்வில் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சார்பில் அறிவுறுத்துவதற்காக சிரேஷ்ட ஆணையாளர் சுஜீவ சேனாதீர, சிரேஷ்ட பிரதி ஆணையாளர் நந்தன குமார மற்றும் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் எம்.எச்.டி. மெனேரிபிடிய ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, தற்போதைய உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கு அமைய வருமான அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் அந்த அறிக்கைகளை சமர்பிக்காததன் மூலம் ஏற்படும் நிலைமை தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வருமான வரி கோவைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக வரி அறிக்கைகளை பூர்த்தி செய்து ஒன்லைன் (Online) முறையில் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்புக்கு சமர்ப்பிப்பது தொடர்பில் பிரயோகரீதியான விளக்கம் வழங்கப்பட்டதுடன், அதன் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.