மைசூரு:மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடில் ஸ்ரீகண்டேஸ்வர சுவாமி கோவிலில் சிக்கஜாத்ரா மஹோற்சவம் நடந்தது.
காலையில் சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
பின், தங்கம், வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீகண்டேஸ்வரர், பார்வதியுடன் பல்லக்கில் வெளியே வந்தனர்.
கோவில் முன் இருந்த தேரில் எழுந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேங்காயை காங்கிரஸ் எம்.எல்.ஏ., தர்ஷன் துருவநாராயணன் உடைத்து ஊர்வலத்தை துவக்கிவைத்தார்.
முதலில் கணபதி தேரும், பின் ஸ்ரீகண்டேஸ்வரர், பார்வதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்கள் பவனி வந்தன.
ரத வீதியின் இருபுறமும் பக்தர்கள் நின்று, தேர்களை கைக்கூப்பி வணங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement