வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 3 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4 -ம் தேதி நடத்தப்பட உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் கூறி இருப்பதாவது: கடந்த நவம்பர் மாதத்தில் தெலங்கானா, ம.பி.,,ராஜஸ்தான்,சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பல்வேறு தேதிகளில் நடந்து முடிந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிச.,3-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததது.
இந்நிலையில் மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிச.,4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மிசோரம் மக்கள் ஞாயிற்றுகிழமையை முக்கிய நாளாக கொண்டாடப்படுவதால் வாக்குஎண்ணிக்கையை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு வாக்கு எண்ணிக்கை டிச.,4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதே நேரத்தில் டிச.,3 ம் தேதி வழக்கம் போல் மற்ற 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வழக்கம் போல் நடைபெறும். இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement