அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை தனது எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இருந்து […]
