Lets celebrate and praise the differently abled people who have changed: December 03 is the day of the differently abled people – | மாற்றிக்காட்டிய மாற்று திறனாளிகளை போற்றி புகழ்வோம் : டிச.,03 ம் தேதி இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் –

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள்.
.
உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். உலகில் ஐந்தில் ஒரு பெண், பத்தில் ஒரு சிறுவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால் பல துறைகளிலும் முத்திரை பதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவ வேண்டும். அவர்களது உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச.,03ல், ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

‘வலி தந்த வலிமையால் வாழ்வுப் பயணத்திற்குப் புதியவழி கண்டவர்கள் நாங்கள். நரம்புகளிலும் நம்பிக்கையுள்ளதால் குறையொன்றும் இல்லை’ என நெஞ்சுறுதியோடு தடைகளை உடைத்து ஒவ்வொரு துறைகளையும் மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகளை நாம் போற்றிப் புகழவேண்டாமா


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.