ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலை பெற்றுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆதரவாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “நாட்டின் ‘பெண்கள் சக்தி’க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் பா.ஜ.க.வின் கொடி உயர்வடையும் என்று ‘பெண்கள் சக்தி’ முடிவு செய்துள்ளது என்று எனது பேரணிகளின் போது அடிக்கடி கூறுவேன்.

எனது அரசியல் வாழ்க்கையில், நான் எப்போதும் கணிப்புகளை தவிர்த்து வந்தேன். ஆனால், இந்த முறை ராஜஸ்தானில் காங்கிரஸ் திரும்பாது என்று கணித்தேன். ராஜஸ்தான் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.
நமது தேசியத் தலைவர் நட்டா, தனது கொள்கை மற்றும் வியூகத்தை செயல்படுத்தியதன் விளைவுதான் இந்த வெற்றி.
தேர்தலின் போது அவரது குடும்பத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்தது, ஆனால் அதையும் மீறி நட்டா இரவும் பகலும் பாஜக ஊழியராக உறுதியாக இருந்தார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு மாற்று இல்லை. 2 தசாப்தங்களாக பா.ஜ.க, ஆட்சியில் இருந்தும், இவ்வளவு காலம் ஆன பின்னரும், பா.ஜ.க, மீது மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கரில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில், “மாநில மக்களை எங்களின் பதவியேற்பு கூட்டத்திற்கு அழைக்கவே இங்கு வந்துள்ளேன். டிசம்பர் 3-ம் தேதிக்கு பிறகு நாங்கள் இங்கு ஆட்சி அமைத்தவுடன் பதவியேற்பு விழா நடைபெறும்’ என்றேன். இன்று நாம் அதன் முடிவுகளைப் பார்க்கிறோம்.

இந்த முடிவுகளின் எதிரொலி மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் இருக்காது. இந்த முடிவுகளின் எதிரொலி வெகுதூரம் செல்லும். இந்த தேர்தல்களின் எதிரொலி உலகம் முழுவதும் கேட்கும்.” என்றார்.
மேலும், “இந்த தேர்தலில் சாதி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடந்தன. எனக்கு பெண்கள் சக்தி, இளைஞர் சக்தி, விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்கள் என நான்கு சாதிகள் முக்கியம் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன்.

பாஜக வெற்று வாக்குறுதிகளை மட்டும் அளிப்பதில்லை, மாறாக அது செயல்திறனை உறுதி செய்கிறது. இந்திய வாக்காளர்களுக்கு சுயநலம் என்றால் என்ன, தேசத்தின் முன்னேற்றம் என்றால் என்ன என்று தெரியும். இன்றைய ஹாட்ரிக் 2024 இன் ஹாட்ரிக் உத்திரவாதத்தை அளித்துள்ளது!” என்றார்.
மேலும், “தமிழகம், புதுச்சேரி, ஒடிசா மற்றும் குறிப்பாக ஆந்திரா மாநில பாஜக தொண்டர்களிடம், மாநில அரசு எந்தக் கட்சியாக இருந்தாலும், நிவாரணப் பணிகளிலும், மீட்புப் பணிகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அர்ப்பணிப்புள்ள பாஜக தொண்டர்களின் மதிப்புகள் இவை. எங்களுக்கு கட்சியை விட நாடும், நாட்டு மக்களும் முக்கியம்” என்றார்.
மேலும் அவர், “தமிழகம், புதுச்சேரி, ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில பாஜக தொண்டர்களிடம், மாநில அரசு எந்தக் கட்சியாக இருந்தாலும், புயல் நிவாரணப் பணிகளிலும், மீட்புப் பணிகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அர்ப்பணிப்புள்ள பாஜக தொண்டர்களின் மதிப்புகள் இவை. எங்களுக்கு கட்சியை விட நாடும், நாட்டு மக்களும் பெரியவர்கள்.” என்றார் மோடி.