
டப்பிங் படங்கள் பற்றி 'வாரிசு' தயாரிப்பாளர் பேச்சு
பான் இந்தியா படமாக 'பாகுபலி 2' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு நேரடிப் படங்கள், டப்பிங் படங்கள் என்பது வித்தியாசம் இல்லாமல் ஆகிவிட்டது. அதன் பின் ஓடிடி தளங்களிலும் பல படங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானதால் மக்கள் அவற்றையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது வெளியாகும் பல தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடப் படங்கள் மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி வருகின்றன. அவற்றில் சில படங்கள் நல்ல வசூலைக் கொடுத்து வெற்றிப் படங்களாகவும் அமைகின்றன.
டப்பிங் படங்கள் குறித்து 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். “எங்களது நிறுவனம் 'அனிமல், பிம்பிசாரா, ஜெயிலர், தசரா, லவ் டுடே, பொன்னியின் செல்வன்” ஆகிய படங்களை ஆந்திரா, தெலங்கானா மாநிங்களில் வெளியிட்டது. இதில் ஒவ்வொரு படமும் வினியோகஸ்தர்களுக்கு லாபகரமான படமாகத்தான் அமைந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.