சாம்ராஜ் நகர் : மஞ்சள் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்து வந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரின் ஆனேஹுண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலு, 65, அவரது மகன் மகாலிங்கா, 35. தங்களின் 2 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமாக, மஞ்சள் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக, ஹனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலையில், திடீரென பயிர்களை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, 34 கிலோ எடையுள்ள 95 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.
தந்தை, மகனை கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
மஞ்சள் பயிர்களுக்கு இடையே வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை, அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இடம்: ஹனுார், சாம்ராஜ் நகர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement