
அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா
ஹிந்தியில் கடந்த வெள்ளி அன்று ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இந்த படத்தை இயக்கியுள்ளார். வன்முறை கொஞ்சம் அதிகமாக உள்ள இந்த படம் பெண்களை மட்டம் தட்டும் விதமாகவும் உருவாகியுள்ளது என படம் வெளியான நாளிலிருந்து சோசியல் மீடியாவில் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை திரிஷா அனிமல் படம் பார்த்துவிட்டு இது ஒரு 'கல்'ட் படம் என சிலாகித்து தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தி இருந்தார்.
பெண்களை தரக்குறைவாக சித்தரிக்கும் இந்த படத்தை திரிஷா இவ்வாறு பாராட்டியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கினர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து விமர்சித்தபோது பெண்களை மதிப்பது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட திரிஷா, இப்படிப்பட்ட ஒரு படத்தை எப்படி பாராட்டுகிறார் என்பது போன்று கருத்துக்களை பதிவிட்டனர். இதனை தொடர்ந்து திரிஷா தனது பதிவை உடனடியாக நீக்கிவிட்டார்.