நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் என்று நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில், நீதி அமைச்சு தொடர்பில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
வடக்கு கிழக்கிற்கு ஆற்றிய சேவையில் 1ஃ1000 பங்கை வழங்கியவர்கள் இந்த பாராளுமன்றத்தில் இல்லை. இந்தியாவில் இருந்து வந்த 12,800க்கும் மேற்பட்டவர்கள் வடக்கில் இருந்தனர். அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்களோ அடையாள அட்டைகளோ இல்லை. கிழக்கில் 3000 க்கும் மேற்பட்ட அவ்வாறான மக்கள் இருந்தனர். அந்த பிரச்சனைகளை தீர்க்க நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்தனர். இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட முன்வரவில்லை.
வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்னமும் சமாதானத்தையே கேட்கின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள இந்த எம்.பி.க்களின் கருத்து தமிழ் மக்களின் கருத்து அல்ல. இவர்கள் அரசியல் பிழைப்புக்காக உழைக்கிறார்கள்.
வடக்கு மக்களை பொறுத்தமட்டில் இந்த பாராளுமன்றம் அரசியல் பிழைப்புக்காக ஒரு சில அரசியல்வாதிகளின் கருத்தல்ல. பாராளுமன்றம் மக்கள்தொகையில் ஒரு பிரிவை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
வடக்கு மக்களைப் பொறுத்த வரையில் இந்த பாராளுமன்றம் அரசியல் பிழைப்புக்காக ஒரு சில அரசியல்வாதிகளின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.
நீதிமன்ற நீதிபதிகள் காரணமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறும் நீதி அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார். பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி எம்.பி.க்கள் நீதிபதிகளை அவமதிக்கக் கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். இது நடந்தால், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க, சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை எவ்வாறு இணைந்து செயல்படும் என நீதி அமைச்சர் கேள்வி எழுப்பினார்.