ஒருங்கிணைந்த சேவையில் முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிறியந்த இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முகாமைத்துவ சேவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரச முகாமைத்துவ சேவையில் அதிகாரிகளை நியமித்த பின்னர் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பொருத்தமற்ற முறையில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதற்குப் பொருத்தமான தீர்வொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வலியுறுத்தினார்.