பெங்களூரு : மூத்த நடிகை லீலாவதி, வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்படுகிறார். பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், சோழதேவனஹள்ளியில் தன் வீட்டில் சிகிச்சை பெறுகிறார். இவரை நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன், துருவா சர்ஜா என, பல நடிகர், நடிகையர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
துணை முதல்வர் சிவகுமாரும், சமீபத்தில் லீலாவதியின் வீட்டுக்கு சென்றார். இவர் கட்டியுள்ள கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, நேற்று மாலை சோழதேவனஹள்ளிக்கு சென்று, லீலாவதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement