உணவு, அத்தியாவசிய பொருட்கள் ‘மோடி கிச்சன்’ மூலம் விநியோகம்: அவசர உதவி எண்களையும் பாஜக அறிவித்தது

சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ‘மோடிகிச்சன்’ மூலம் உணவு, அத்தியாவசிய பொருட்கள் பாஜகசார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், அவசர உதவிஎண்களையும் பாஜக அறிவித்துள்ளது.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாஜக சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுவோர், 89258 18859, 91500 21836, 91500 21838 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பாஜக சார்பில் சென்னையில் பல்வேறு இடங் களில் முகாம்கள் அமைக் கப்பட்டு, உணவு தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது.

அந்தவகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ‘மோடி கிச்சன்’ திட்டம் மூலம் பாஜக சார்பில் உணவு, பால்மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், நீலாங்கரை, மடிப்பாக்கம் உட்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைத்து பாஜகவினர் உணவு, பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.