சபரிமலை : ஐதராபாத்தில் இருந்து பக்தர்கள் குழுவினருடன் வந்த ‘பைரவன்’ என்ற நாய் சபரிமலை சன்னிதானத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
ஐதராபாத்தில் இருந்து குருசாமி ராஜசேகர் தலைமையில் 130 பக்தர்கள் அடங்கிய ஒரு குழுவினர் கால்நடையாக சபரிமலை புறப்பட்டனர்.
இவர்கள் தமிழகத்தில் சேலத்துக்கு வந்த போது ஒரு நாய் இந்த பக்தர்கள் குழுவுடன் சேர்ந்தது. அவர்களை விட்டு பிரியாமல் இருந்த அந்த நாய்க்கு பக்தர்கள் உணவு கொடுத்தனர்.
சேலம் அண்டி பேட் கோட்டை செக்போஸ்டில் இருந்து இந்த நாய் பக்தர்களுடன் சபரிமலைக்கு பயணத்தை தொடங்கியது. பக்தர்களுடன் தொடர்ந்து நடந்து வந்த நாய் அக்குழுவில் ஒரு அங்கமாக மாறியது. இதையடுத்து அதற்கு ‘பைரவன்’ என்று பெயர் வைத்து பக்தர்கள் கூடவே அழைத்து வந்தனர். வள்ளகடவு, புல்மேடு வழியாக சபரிமலை சன்னிதானம் பாண்டித்தாளத்தில் உள்ள மாகுண்டா நிலையத்துக்கு பக்தர்கள் வந்த போது அங்கும் நாய் பைரவன் கூடவே இருந்தது. பைரவனை ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக குழுவை சேர்ந்த பக்தர் நரேஷ் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement