சென்னை: Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் வெளியே வர வேண்டும் என விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார். மிக்ஜாம் புயலால் பெய்த மழை சென்னையை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. நகரின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. நேற்று காலையிலிருந்து தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
