அன்டிபயோடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பி) வில்லைகளை வைத்தியரின் அனுமதியின்றி அதிகமாகப் பயன்படுத்துவதனால், அவற்றில் காணப்படும் பற்றீரியா நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படும் தன்மை வேகமாகக் குறைந்து வருவது உங்களுக்குத் தெரியுமா?
தவறான பாவனையினால் நோய்களை ஏற்படுத்தக் கூடிய பற்றீரியாவினால் தற்போது எம்மிடம் காணப்படும் பிரபலமான நுண்ணுயிர் மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய தன்மை துரிதமாக அதிகரித்து வருகிறது.
இதனால் வருடாந்தம் பல மில்லியன் எண்ணிக்கையிலான மனித உயிர்கள் உலகை விட்டுப் பிரிகின்றன. எமது எதிர்கால சந்ததியினரின் ஆயுள் பாதுகாப்பிற்காக நுண்ணுயிர் எதிர்ப்பி தொடர்பாக இன்றே செயற்படுவோம்.
பின்வரும் சகல அறிவித்தல்களையும் தவறாமல் பின்பற்றுவோம்.
1. தகைமையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வைத்தியர் ஒருவரின் சிபாரிசின்றி எச்சந்தர்ப்பத்திலும் விரும்பியவாறு அன்டிபயோடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பி) எடுக்க வேண்டாம்.
2. குறிப்பிட்ட காலப்பகுதிக்கு, குறிப்பிட்ட மாத்திரையை, குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் மருத்துவ சிபாரிசிற்கு இணங்கவே நுண்ணுயிர் எதிர்ப்பி பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பியை, மருத்துவ சிபாரிசின்றி வேறு நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
4. பயன்படுத்திய பின் மீதியாகக் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை, மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
இது சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஒரு செய்தி.